பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அதிகாரப்பட்டியில் முன்விரோதம் காரணமாக மாரியப்பன் மகன் சுஜித்குமார் மற்றும் யோகவேல் தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினரும் ஏ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவலர்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்து, யோகவேல் உட்பட 6 பேரை கைது செய்தனர்.