தர்மபுரி: சாலையில் செல்லும் கழிவு நீர் பொதுமக்கள் அவதி

தர்மபுரி 4 ரோடு அருகே அரசு பட்டு கூடு அங்காடி அரசு ஆவின் வளாகம் உழவர் சந்தை போன்ற பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அடைப்பை ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

தினமும் காலையில் உழவர் சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வருகின்றனர். அப்போது உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் கழிவுநீர் கால்வாய் தேங்கி இருப்பதால் உழவர் சந்தை செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பொதுமக்கள் காலையில் ஆவின் நிலையத்தில் பால் வாங்க செல்லும்போது கழிவுநீர் கால்வாயை தாண்டித்தான் செல்ல வேண்டும். அங்கு துர்நாற்றம் வீசுகிறது. 

இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உழவர் சந்தை மற்றும் ஆவின் பால் நிர்வாகிகள் தெரிவித்தனர். நகராட்சி அலுவலரிடம் இதைப் பற்றி கேட்கும்போது எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. இப்பகுதியில் உடனே கழிவுநீர் கால்வாய் சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி