தர்மபுரி: சனத்குமார் நதி புனரமைப்பு பணிகள் துவக்கம்

தர்மபுரி மாவட்டத்தின் பழமை வாய்ந்த சனத்குமார நதி கழிவுகளால் சிதிலமடைந்த நிலையில், பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு சீரமைக்காததால், நேற்று புதன்கிழமை தருமபுரி மாவட்ட நிர்வாகம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மற்றும் ஆதி பவுண்டேஷன் இணைந்து நதி புனரமைப்பு பணியை தொடங்கியது. மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கி வைத்தனர். நதியின் தூய்மையைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி