இதற்கான எந்த முறையான அறிவிப்பும் இதுவரை வழங்கப்படவில்லை. மாவட்ட பதிவாளர் பொதுமக்கள் அணுகியதற்கு பொழுது தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து முறையான எந்த தகவலும் அரசு தரப்பில் இருந்தோ அதிகாரிகளோ எங்களுக்கு தெரிவிக்கவில்லை. சுமார் 6 தலைமுறைகளாக எங்களுக்கு சொந்தமான நிலத்தை விவசாயம் செய்தும் விற்பனை செய்தும் வாங்கியும் வந்தோம். தற்போழுது திடீரென எங்கள் நிலம் எங்களுக்கே சொந்தமில்லை என கூறுவதால் செய்வதறியாது திகைத்து நிற்கிறோம். அதனால் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்துள்ளோம். இந்த சம்பவம் மனவேதனையை தருகிறது.
மேலும் அவர்கள் தடை விதித்திருக்கும் ஏற்கனவே உள்ள ஆவணங்களின் அடிப்படையில் பட்டா நிலங்கள் ஆகும். பல தலைமுறைகளாக அனுபவித்து வரும் மேற்கண்ட இடங்களுக்கு பத்திரப்பதிவு தடை செய்திருப்பது ஏற்புடையதல்ல. எனவே உடனடியாக தடைகளை நீக்கி எங்களுக்கு பட்டா தொடர்பான சிக்கல்களை தீர்த்து அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.