தர்மபுரி: ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினர் கைது

பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளையும் இயக்கக் கோரி இன்று திங்கட்கிழமை வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ்குமார் தலைமையில் கட்சியினர் பேருந்து நிலையத்தில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என போலீசார் தடுத்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது. எச்சரிக்கையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி