அரூர் அருகே பையர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுதீப் என்பவர், பிளஸ்-1 மாணவியைக் காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு 5 மாத கர்ப்பம் உறுதியானதை அடுத்து, கோட்டப்பட்டி காவல்துறையினர் சுதீப் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.