தர்மபுரி: மதுவுக்கு அடிமையான அப்பாவால் பிளஸ் 1 மாணவன் தற்கொலை

ஏ. ஜெட்டிஅள்ளி எர்ரப்பட்டியைச் சேர்ந்த +1 மாணவன் ஹரீஷ், செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். தந்தையின் மதுப் பழக்கத்தினால் தாயுடன் ஏற்பட்ட சண்டையே அவரது மனவேதனைக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்கொலைக்கு முன் நண்பர்களுக்கு இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி