தருமபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அருகே கே. ஈச்சம்பாடி பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள அணையில் இருந்து பாசன வசதி பெறும் விவசாயிகள், சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர் பெருக்கத்திற்காக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.