அரூர் அருகே செங்கப்பாடியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தன், புதன்கிழமை தீர்த்தமலை-ஆண்டியூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தார். குடும்பத்தினர் அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.