தர்மபுரி: அரசு பள்ளிகளில் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ ஆய்வு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட போதக்காடு மற்றும் அஜ்ஜம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, தலா ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை மற்றும் மதிய உணவு குறித்து பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது போதக்காடு பள்ளி மாணவ மாணவர்கள் மேல தாளங்கள் முழங்க எம்எல்ஏ கோவிந்தசாமி உற்சாகமாக வரவேற்றனர். மேலும் இந்த ஆய்வில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி