தர்மபுரி: தோட்டத்திலேயே தர்பூசணி பழங்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

தற்போது தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கியுள்ளது. பொதுவாக கோடைகாலங்களில் தர்பூசணி பழங்களின் தேவையும் விற்பனையும் அதிகரிப்பது வழக்கம். தற்போது தர்பூசணி பழங்களின் நிறம் அதிகரிக்க ரசாயன ஊசிகள் செலுத்தப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து, தர்மபுரி உணவு மற்றும் பாதுகாப்புத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடத்தூர் அருகே உள்ள பாசரபட்டியில் தோட்டக்கலைத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று (ஏப்ரல் 3) மாலை ஒரு விவசாயியின் தோட்டத்தில் தர்பூசணியை ஆய்வு செய்தனர். 

அப்போது அதில் எந்தவித ரசாயனமும் கலக்கப்படவில்லை, முற்றிலும் இயற்கையான நிறம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், ரசாயனம் கலந்த தர்பூசணி விற்பனை செய்யப்படுவதாக பரவிய தகவலால் விற்பனை பாதிக்கப்படுவதாகவும், இந்தத் தகவல்களை நம்ப வேண்டாம் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி