தர்மபுரி: 5 தொகுதிகளில் 114 நபர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் பென்னாகரம் தொகுதியில் 31, தர்மபுரி தொகுதியில் 29, பாலக்கோடு தொகுதியில் 22, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 15, மற்றும் அரூர் தொகுதியில் 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 24 பேரின் வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டு, 114 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி