இதில் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார். அரூர் எம்எல்ஏ சம்பத்குமார், பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்ட நிலையில் அப்போது பேசிய பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ தான் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்தில் 45 சதவீதம் நிறைவேறி விட்டதாக கூறியது எந்த விதத்தில் நியாயம் என அமைச்சரை கேள்வி கேட்டதன் அடிப்படையில் அங்குள்ள திமுக நிர்வாகிகள் கூச்சலிட்டு வெளியே போ என்று கூச்சலிட்டனர்.
இதனை அடுத்து பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் வெளியேறினார். இதனை எடுத்து காவலர்கள் பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.