கம்பைநல்லூர் அடுத்த கே. அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ஆதிபிரகாஷ் (19) என்பவர் ஞாயிற்றுக்கிழமை மாலை சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, நத்தமேடு அருகே நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது தாய் செந்தாமரை அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் ஜெய் கீர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.