தர்மபுரி: சாலையை கடக்க முயன்றவர் வாகனம் மோதி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை செல்பி பாலம் அருகே, நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதியமான் கோட்டை காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி