தர்மபுரி: கஞ்சா விற்பனை செய்தவர் கைது

தர்மபுரி நகரப் பகுதிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பதாக தர்மபுரி நகர பி1 காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ்குமார் தலைமையில் காவலர்கள் நேற்று (பிப்ரவரி 15) மாலை அந்த பகுதியில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். 

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் தர்மபுரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளிதாஸ் என்பதும் கஞ்சா விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவலர்கள் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி