தர்மபுரி: வார சந்தையில் 1. 65 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் வார சந்தையில் நேற்று சுமார் 1.65 கோடிக்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதில் மாடுகள் ரூ. 6,500 முதல் ரூ. 45,000 வரை என 72 லட்சத்திற்கும், ஆடுகள் ரூ. 5,000 முதல் ரூ. 25,000 வரை என 90 லட்சத்திற்கும், நாட்டுக் கோழிகள் மற்றும் சேவல்கள் ரூ. 300 முதல் ரூ. 1,700 வரை என 3 லட்சத்திற்கும் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி