தர்மபுரி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் புதன்கிழமை இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை பகுதிகளில் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சில டாஸ்மாக் கடைகள் முன்பு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.