தர்மபுரி: காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக பால்குட ஊர்வலம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நரிப்பள்ளியில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்ட நிலையில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் பல்வேறு ஆராதனைகள் நடைபெற்றன. 

இன்று (ஜூன் 6) காலை பல்வேறு யாக வேள்வி பூஜைகளும் கலச பூஜைகளும் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பால் கூட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக தாரை தப்பட்டை வானவேடிக்கைகளுடன் பால்குடம், முளைப்பாரிகைகளுடன், கோபுர கலசம் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றனர். இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி