தர்மபுரி: தவெக மாவட்டச் செயலாளர் பேட்டி

தர்மபுரி மாவட்டம் சோழகத்தூரில் இன்று தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர் தாபா சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் அளித்த பேட்டியில் கடந்த 31 ஆண்டுகளாக தளபதி விஜய் அவர்களுடன் ரசிகராக பயணித்து தற்போது தொண்டனாக இருந்தேன். என் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக தர்மபுரி மாவட்ட செயலாளராக பதவி வழங்கியுள்ளார். அதை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தர்மபுரி மாவட்டம் முழுவதும் அமோக வரவேற்பும் பெண்கள், இளைஞர்கள் உட்பட அனைவரின் ஆதரவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தளபதி விஜய் அவர்களிடம் சமர்ப்பிப்போம் என தெரிவித்தார். 

மேலும் இந்த ஐந்து தொகுதிகளில் ஒரு தொகுதியில் தளபதி விஜய் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், தேர்தலுக்கு இன்னும் அதிக காலஅவகாசம் இருப்பதால் அப்போது தலைமை அதனை அறிவிக்கும் என தமிழக வெற்றிக்கழக செயலாளர் தாபா சிவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி