தர்மபுரி: மாணவர்களுக்கு புத்தாக்க வடிவம் உருவாக்கும் போட்டி

தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புத்தாக்க மேம்பாட்டு திட்டம் சார்பில் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி வடிவம் உருவாக்கும் போட்டி நேற்று ஜனவரி 28 நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர். 

இதில் பசுமை வீடுகள், நவீன எந்திரங்கள் மூலம் நமது பணிகளை செய்தல், ரோபோடிக்ஸ் எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய படைப்புகளை மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் கௌதம் சண்முகம் தலைமை தாங்கி அறிவியல் கண்டுபிடிப்புகளில் தேர்வான 17 குழு அணிகளை சேர்ந்த 80 மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

தொடர்புடைய செய்தி