தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் மொரப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணியளவில் மொரப்பூர், கோபிநாதம்பட்டி, ஓடசல்பட்டி கூட்ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. திடீரெனப் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.