நல்லம்பள்ளி அருகே ஜாகிர் பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. தொப்பூர் காவலர்கள் விசாரணை நடத்தியபோது, காரை ஓட்டி வந்த ஓட்டுநர் தப்பி ஓடியது தெரிய வந்தது. காரை சோதனை செய்தபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 220 கிலோ குட்கா பொருட்கள் மூட்டையில் கட்டி கடத்தி வந்தது தெரிய வந்தது. காவலர்கள் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.