தர்மபுரி: கம்பைநல்லூரில் 27 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் பகுதியில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். 

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர். நேற்று சிறிய அளவிலான ஆடுகள் 5,500-க்கும், பெரிய அளவிலான ஆடுகள் 12,500 வரையும் விற்பனையானது. மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 27 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி