தர்மபுரி: அரூர் எம்எல்ஏ தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம்

அரூர், பொய்யப்பட்டியில் தருமபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமை அரூர் எம்எல்ஏ வே. சம்பத்குமார் தொடங்கி வைத்தார். பொய்யப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில், கண்புரை அறுவை சிகிச்சைக்காக பலர் கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். ஆர். பசுபதி, நகர செயலாளர் பாபு, பொருளாளர் சாமிக்கண்ணு ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். ஓய்வு பெற்ற அரசு கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தொடர்புடைய செய்தி