தர்மபுரி: கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் காவல் நிலையம் உதவி காவல் நிலையத்தின் செல்வராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் சிவலிங்கம் ஆகியோர் கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுங்கார் அள்ளி பகுதியில் நேற்று (ஜூன் 15) மாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான வாலிபர்களை நிறுத்தி விசாரணை நடத்தியபோது அவர்கள் இருசக்கர வாகனத்தில் 200 கிராம் கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. 

மேலும் விசாரணை நடத்தியபோது அவர்கள் சுங்கார் அள்ளி பகுதியைச் சேர்ந்த கௌதமன், கோபி, பிரதீப், ஆகாஷ் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நான்கு பேரையும் கடத்தூர் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது, எங்கிருந்து கடத்தி வந்தனர் என்பது குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி