இந்த நிகழ்ச்சிக்கு நல்லம்பள்ளி வட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் மழைக்காலங்களில் உயிரையும் உடைமைகளையும் தற்காத்துக் கொள்ளும் முறைகள் குறித்து தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அணையில் மூழ்கியவர்கள் எவ்வாறு மீட்பது, முதலுதவி செய்வது, அவர்களை காப்பாற்றுவது குறித்தும் விழிப்புணர்வு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.
Motivational Quotes Tamil