இது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஜெயராமன் புகார் அளித்துள்ளார். அதியமான்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து செல்வராஜ் இடம் இருந்து ஒரு பத்திரத்தை மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளனர். மீதமுள்ள மற்றொரு பத்திரத்தை கொடுக்காமலும் பெற்ற பணத்தை கொடுக்காமலும் இழுத்தடித்து வந்ததால் இது குறித்து ஜெயராமன் கடந்த 4 தேதி எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்துள்ளார்.
அப்போது மண்ணெண்ணெய் எடுத்து மேலே ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார். ஜெயராமனுக்கு 60% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.
இன்று (ஜூன் 10) உயிரிழந்த ஜெயராமனின் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும். உரிய விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தின் பத்திரத்தை மீட்டுத் தர வேண்டும் என உறவினர்கள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.