தர்மபுரி: புளிய மரத்தில் மோதி விபத்து விவசாயி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொட்டுமாரன் அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயியான இவர், தனது இருசக்கர வாகனத்தில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு இன்று மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். 

அப்போது, திடீரென தறிகெட்டு ஓடிய இருசக்கர வாகனம் நிலை தடுமாறி ரோட்டாரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதியது. இதில், வண்டியிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தலைகொண்டானை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பிரவீன்குமார் கொடுத்த புகாரின் பேரில், காரிமங்கலம் காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி