நூலஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிகளில் 98 தன்னார்வப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று தொழுநோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை, நவம்பர் 6 அன்று மாலை, தருமபுரி மாவட்ட துணை இயக்குநர், தொழுநோய் மருத்துவர் புவனேஸ்வரி கள ஆய்வு மேற்கொண்டார். அவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினார்.