தர்மபுரி: அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் பதவி ஏற்ற நாள் முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் அரூர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் குறிப்புகள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்பு மருத்துவர்களிடம் நோயாளிகளை கனிவுடன் கவனித்துக்கொள்ள மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வின்போது மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி