தர்மபுரி மாவட்டம் அரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று (நவ. 11) செவ்வாய்கிழமை, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, கோட்டப்பட்டி, தீர்த்தமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சேலம் பைபாஸ் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.