தர்மபுரி: எஸ்பியிடம் புகார் மனு அளித்த தவாகவினர்

தர்மபுரி, மாவட்ட எஸ்பி மகேஸ்வரனை நேரில் சந்தித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொது செயலாளர் தவமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த், நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று புகார் மனு ஒன்று கொடுத்தனர். 

அந்த மனுவில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினராக கூட இதுவரை இல்லாத செந்தில்குமார் என்பவர், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர், சிந்தல்பாடி என்ற முகவரியுடன், போலியான ஒரு விசிட்டிங் கார்டை அச்சடித்து வைத்துக் கொண்டு, நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்தாமல் அடாவடி செய்வதாக கூறப்படுகிறது. 

மேலும், அவர் தனது காரில் மாவட்ட செயலாளர் என்று கூறிக்கொண்டு, கடத்தல் உள்ளிட்ட அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எங்களது கட்சி பெயரை சொல்லி கட்டப் பஞ்சாயத்து செய்வது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்துள்ளது. 

இது போன்ற மோசடி செய்து, எங்கள் கட்சி பெயரை தவறாக பயன்படுத்தி, வன்முறையில் ஈடுபடும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி