அரூர் அடுத்த சங்கிலிவாடி கிராமத்தில் உள்ள ஏரியின் கரையோரப் பகுதியில், அதே கிராமத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 12க்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் ஏரியில் வீசப்பட்டதையடுத்து, வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் நேற்று சனிக்கிழமை மாலை ஏரிக்குச் சென்று அவற்றைச் சேகரித்தனர். இந்த அட்டைகள் எதற்காக வீசப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.