சேலத்தில் தனியார் கல்லூரியில் படித்து வந்த மொரப்பூர் எம். பள்ளிபட்டியைச் சேர்ந்த மாணவர் முத்துலட்சுமணன், நேற்று புதன்கிழமை சேலத்தில் இருந்து மொரப்பூர் வழியாக ரயிலில் பயணம் செய்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாகத் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த மொரப்பூர் ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் கோபண்ணா மற்றும் காவலர்கள் விரைந்து சென்று மாணவரின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.