தர்மபுரி: மினி பேருந்துகளை தொடக்கி வைத்த ஆட்சியர்

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காணொளி காட்சியின் வாயிலாக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ், கலந்துகொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, 26 புதிய விரிவான மினிபஸ்களை (சிறுபேருந்துகள்) கொடியசைத்து தொடங்கி வைத்து, மினிபேருந்து வழித்தடங்களுக்கான ஆணைகளை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.கே. ஜெயதேவ்ராஜ், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா. லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஏ.கே. தரணீதர், நகராட்சி ஆணையாளர் திரு. சேகர், தருமபுரி ஒன்றிய கழக செயலாளர், காவேரி நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் எம்.பி. பெரியண்ணன், தருமபுரி நகர் மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், மினிபஸ் உரிமையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி