தர்மபுரி: தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூகப்பணி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இளைஞர் நீதிக் குழுமத்திற்கு ஒரு பெண் உட்பட 2 சமூகப்பணி உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவி அரசு பணி அல்ல. விண்ணப்பதாரர் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிவராக இருத்தல் வேண்டும். 

இதற்கான விண்ணப்படிவத்தை தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து (http://dsdcipimms.tn.gov.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதிவாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 19.06.2025 வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண். 300, புரசைவாக்கம், நெடுஞ்சாலை, சென்னை என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி