தர்மபுரி: பாலக்கோட்டில் உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

பாலக்கோடு நகரத்தில் புதூர் பொன் மாரியம் மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 25-ந்தேதி பாலக்கோடு தாலுகாவிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில், மார்ச் மாதம் 7-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்று பாலக்கோடு சார்நிலைக் கருவூலம், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி