காரிமங்கலத்தில் திங்கள்கிழமை நடைபெறும் தேங்காய் வார சந்தையில் நேற்று நவ. 24 அன்று விவசாயிகள் 1.50 லட்சம் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் கொண்டு வந்த தேங்காய்கள், அளவைப் பொறுத்து ரூ. 21 முதல் ரூ. 36 வரை விலை போனது. சபரிமலை சீசன் தொடங்கியுள்ளதால் தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று மட்டும் சுமார் 27 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.