தர்மபுரி: தேங்காய் வியாபாரி.. தூக்கிட்டு தற்கொலை

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே உள்ள பசிகம் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி கண்ணபிரான் (44), கடந்த 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் விரக்தியடைந்த அவர், திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது மனைவி அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணபிரான் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி