தர்மபுரி: புளுதியூரில் ரூ.53 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட கோபிநாதம்பட்டி அடுத்துள்ள புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடைகள் விற்பனைக்காக வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற வாரச் சந்தையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வியாபாரிகள் கால்நடைகளை விற்க & வாங்க வந்திருந்தனர். மேலும் இரு தினங்களில் ஆடி 18 விழா நடைபெற உள்ளதால் விற்பனை நடைபெற்றது மாடுகள் ரூ. 5,000 முதல் ரூ. 39,500 வரை என 20 லட்சத்திற்கும், ஆடுகள் ரூ. 4,500 முதல் ரூ. 15,000 வரை என 33 லட்சத்திற்கும் என ஒட்டுமொத்தமாக 53 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானது.

தொடர்புடைய செய்தி