தர்மபுரி: இருசக்கர வாகன விபத்து சிறுவன் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்கு உட்பட்ட கம்பைநல்லூர் அடுத்த பொம்பட்டியைச் சேர்ந்த கவிப்பிரியன் (17) என்பவர், தனது தம்பியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாரப்பநாயக்கன்பட்டி அருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்தில் சுயநினைவிழந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிப்பிரியன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி