தர்மபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் என்டிஏ கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தை ஆளும் திமுக அரசு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து பாஜக மாவட்ட தலைவர் பேசியதை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜக கட்சிக் கொடிகளை தூக்கி எறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அமமுக நிர்வாகி முருகன் தலையிட்டு சமரசம் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.