பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியம், துறிஞ்சிப்பட்டி சக்தி கேந்திரத்தில் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில், சக்தி கேந்திர பொறுப்பாளர் விக்னேஷ் பேசுகையில், திமுக தனது எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்றும், சொத்து வரி உள்ளிட்ட வரிகளை உயர்த்தி உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், பாரதிய ஜனதா கூட்டணியுடன் உள்ள கட்சிகளுக்கு வாக்களித்து திமுகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.