தர்மபுரி: தவெக சார்பில் அஞ்சலையம்மாள் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாளின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திங்கட்கிழமை தர்மபுரி நான்கு ரோடு பகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வீரமணி, மாவட்ட பொருளாளர் கோபி, நகர செயலாளர்கள் விஜயகுமார், சிட்டி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அஞ்சலையம்மாள் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.

தொடர்புடைய செய்தி