தர்மபுரி: அதிமுக புதிய மாவட்ட செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

தர்மபுரி அதிமுகவில் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த நிலையில், கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டு, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற அன்பழகன் ஞாயிற்றுக்கிழமை அரூரில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது, அரூர் பேருந்து நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த நியமனம் தர்மபுரி மாவட்ட அதிமுக அரசியலில் பல்வேறு மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி