தர்மபுரி மாவட்டம் மொரப்பூரில் நேற்று சனிக்கிழமை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற நம்ம ஊர் மோடி பொங்கல் விழாவில் திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்துகொண்டார். அவர் கிராம மக்களுடன் இணைந்து கும்மி பாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி பொங்கல் வைத்தார். இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் மாவட்ட பாஜக தலைவர் சரவணன், அரூர் மண்டல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.