சென்னையில் இருந்து ஈரோடு மாவட்டம் கூடுதுறை பவானிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் தனியார் வாகனத்தில் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தொப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.