தர்மபுரி: பிரமாண்டமாக நடந்த முனியப்ப சுவாமி கும்பாபிஷேக விழா

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பி. செட்டி அள்ளி ஊராட்சி கவுனூர் கிராமத்தில் உள்ள முனியப்பன் கோயிலின் கும்பாபிஷேக விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 16) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கே. பி அன்பழகன் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகத்தினர் அவரை சிறப்பாக வரவேற்றனர். பக்தர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி