தர்மபுரி அருகே வெடி விபத்து; 3 பேர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் அருகாமையில் அமைந்துள்ள வெதரம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாசு குடோனில் பிப்ரவரி 24 பிற்பகல் 3:00 மணி அளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டதால் அங்கு பணியாற்றியவர்கள் மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் வெடி விபத்து நடந்த இடத்தில் தீயணைப்பு துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் என பல துறை சார்ந்த அரசு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும் சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்துள்ளதால் அங்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி